குடும்ப வறுமையால் 15 வயது அதிகமான இயக்குநரை மணந்த சந்தியா… கடைசியில் இப்படி நடந்துவிட்டது: வெளியான உருக்கமான தகவல்

கணவனால் கொலை செய்யப்பட்ட துணை நடிகை ரம்யா குறித்து குமரி மாவட்டத்தை சேர்ந்த அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் உறவினர்கள் உருக்கமான தகவலை வெளியிட்டுள்ளனர். சந்தியாவின் பெற்றோர் ஏழ்மையானவர்கள். அவரது பெற்றோர் டீக்கடை நடத்தி வருகிறார்கள். சந்தியாவுக்கு ஒரு அக்காவும், அண்ணனும் இருக்கிறார்கள். அண்ணன் கேரளாவில் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார். அக்கா திருமணமாகி தென்தாமரை குளத்தில் வசித்து வருகிறார். சந்தியா சிறு வயதிலேயே அழகாக இருப்பார். அவருடைய பெற்றோர் ஊரில் சிறிய டீக்கடை நடத்தி வருகின்றனர். எனவே குடும்ப வறுமை காரணமாக 7-ம் வகுப்புடன் சந்தியா படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார்.

அப்போதுதான், தரகர் மூலம் சென்னையில் இயக்குநராக இருக்கும் பாலகிருஷ்ணன் என்பவர் மாப்பிள்ளையாக வந்தார். நல்ல வசதியான குடும்பம் என்று கூறி சந்தியாவை பெண் கேட்டு அவருடைய பெற்றோரை அணுகினார். முதலில் மறுப்பு தெரிவித்த சந்தியாவின் பெற்றோர், நாம்தான் கஷ்டப்படுகிறோம், நம்முடைய மகளாவது நன்றாக வாழட்டும் என நினைத்து திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். சந்தியாவை விட பாலகிருஷ்ணனுக்கு சுமார் 15 வயது கூடுதல் இருக்கும்.

குடும்ப வறுமை காரணமாக சந்தியா திருமணத்திற்கு ஒத்துக்கொண்டார். திருமணமாகி சந்தியாவுக்கு 2 பிள்ளைகள் பிறந்தனர். ஆரம்பத்தில் தூத்துக்குடியில் சந்தியா வசித்து வந்தார். விடுமுறை கிடைக்கும்போது பாலகிருஷ்ணன் வீட்டுக்கு வந்து மனைவி மற்றும் பிள்ளைகளை பார்த்து செல்வார்

சந்தியா அனைவரிடமும் சகஜமாக பேசும் பழக்கம் கொண்டவர் என்பதால் பாலகிருஷ்ணனுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை வந்தது, இதனால் தனது கணவரை பிரிந்து வாழலாம் என சந்தியா முடிவு செய்தபோதுதான் இப்படி கொலை செய்யப்பட்டுள்ளார் என கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!