பிரபல தொலைக்காட்சிகளில் பல முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வரும் தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ள போகிறார் என்ற தகவல் இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது. விஜேவாகவும் நடிகையாகவும் நடித்துள்ள அர்ச்சனா நிகழ்ச்சிக்கு வந்தால், பிக் பாஸ் வீடு கலகலப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, அர்ச்சனாவுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பர்ஃபார்மன்ஸ் செய்ய காத்திருந்த பிரபல விஜேவான அர்ச்சனாவுக்கு அவர் பணிபுரியும் தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந்து அழுத்தம் தரப்பட்டதாகவும், இதனால் பெரிய பஞ்சாயத்து நடைபெற்று கடைசியில் அவர் பர்ஃபாமன்ஸ் செய்யாமல், நிறுவனத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடைசி நேரத்தில் ஏற்பட்ட சிக்கலால் பங்கேற்பது கேள்விக் குறியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான புகைப்படங்கள் தான் அதற்கு காரணம். அவரது குடும்பத்தை அவர் ரொம்பவே மிஸ் செய்து போஸ்ட் செய்ததை போல இருக்கிறதாம். மேலும் அவரது வீட்டில் யாரும் இல்லாமல், அர்ச்சனா அந்த வீட்டை தனியாக புகைப்படமும் எடுத்து பதிவிட்டுள்ளார். ஒருவேளை அவர் பிக்பாஸ் போட்டிக்காக, தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறாரோ என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனினும் இதற்கான விடை இன்னும் கொஞ்சம் நாட்களில் கிடைத்துவிடும் என நம்பலாம்.