‘குக் வித் கோ மாளி’ புகழி-ன் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா..? – இதோ அழகிய குடும்ப புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் படங்களில் நடிக்க வேண்டும் என்றால் ஒன்று நடிகர்களின் வாரிசாகவோ அல்லது பிரபலங்களின் வாரிசாகவோ இருந்தால் மட்டுமே படங்கள் மற்றும் சின்னத்திரையில் நடிக்க முடியும். ஆனால் இதை மாற்றும் நோக்கத்தில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி திறமையான பலரை தற்போது தனது நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமாக்கியதோடு அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி டிஆர்பியில் டாப் லிஸ்டில் உள்ளதோடு உலக அளவில் பிரபலமடைந்துள்ளது.

இதற்கு காரணம் அந்த நிகழ்ச்சியில் வரும் குக்குகளும் கோமாளிகளும் சமையல் எனும் பெயரில் செய்யும் அட்டகாசங்களே.அதிலும் கோமாளிகளான பாலா, சரத், சிவாங்கி, மணிமேகலை என இவர்களது அட்டகாசமான நகைச்சுவை வேற லெவல். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சிரிச்ச போச்சு மூலம் அறிமுகமானவர் புகழ்.இதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நகைச்சுவையான நிகழ்ச்சியின் மூலம் மக்களை மகிழ வைத்து வந்தார்.

ஆனால், குக் வித் கோமாளி என்ற ஒரே நிகழ்ச்சி அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பை வெள்ளித்திரையில் ஏற்படுத்தியது. அதன்முலம் தற்போது திரையுலகின் முன்னணி நடிகர்களான, சூர்யா, விஜய் சேதுபதி, சந்தானம் என பலருடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் புகழ் தனது அம்மா மற்றும் அப்பாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்…