குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கியா இது? புதிய எபிசோடுக்காக ஆளே மாறிட்டாங்களே! வைரலாகும் புகைப்படம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. பிக் பாஸ் நிகழ்ச்சியை போலவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் மக்களிடையே மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சியில் சமையல் மட்டும் இல்லாமல் டாஸ்க்களும் உண்டு. இந்த நிகழ்ச்சி சமையலுடன் காமெடியும் நிறைந்திருக்கும். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இதில் இறுதியாக ஒரு வெற்றியாளர் இருப்பார்.

மிகவும் ரகளையான இந்த நிகழ்ச்சி தற்போது முதல் சீசன் முடிந்து ரெண்டாவது சீசன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை இவர்களின் காமெடி வேற லெவெலில் இருக்கும். இந்த நிகழ்ச்சியில் முக்கியமான கோமாளிகளில் ஒருவர் தான் ஷிவாங்கி. அதிலும் முக்கியமாக ஷிவாங்கிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அவர் அஸ்வினுக்காக செய்யும் குறும்புகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம்.

இதுவரை வந்த எபிசோடுகள் அனைத்துமே ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டது. அடுத்து வரும் எபிசோடுகளில் என்ன நடக்கும் என்று ரசிகர்கள் யோசித்து வருகிறார்கள். அண்மையில் புதிய எபிசோட் படமாக்கப்பட்டதாக தெரிகிறது. அதற்காக ஷிவாங்கி டோரா கெட்டப் போட்டிருக்கிறார். முதன்முதலாக அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published.