தொலைக்காட்சிகளில் ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பு பெற்றதில் விஜய் தொலைக்காட்சியும் ஒன்று. சீரியல், காமெடி, நடனம், பாடல், என பல வருடங்களாக மக்கள் மகிழ வைத்து வரும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இதில் ரசிகர்கள் மனதில் இருந்து இதுவரை நீங்காத நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்றால் கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர், மௌன ராகம் என பல விஷயங்களை கூறி கொண்டே இருக்கலாம்.

ரசிகர்களுக்கு ஏற்றார் போல் விதவிதமாக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். குக் வித் கோமாளி நிகழ்ச்சியை கலக்கப்போவது யாரு புகழ் நிஷாவும், ரக்ஷனும் தொகுத்து வழங்கியிருந்தார்கள். இந்நிகழ்ச்சியில் புகழ், பாலா, சாய் ஷக்தி, ஷிவாங்கி என பலர் பங்கேற்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளரும், சீரியல் நடிகருமான சாய்சக்தி தற்போது திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர் மும்பையை சேர்ந்த ஃபத்துல் ஃபாத்திமா என்பவரை தற்போது திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் உறவினர்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சாய் சக்திக்கு நெருக்கமான குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கு கொண்டனர். அவருக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.