குக் வித் கோமாளியில் சிவகார்த்திகேயனிடம் பழைய நினைவுகளை கூறிய அஷ்வின்.. வைரல் புகைப்படம் இதோ!

விஜய் ரிவி ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஷோ என்றால் அது குக் வித் கோமாளி தான். குக் வித் கோமாளி 2-வில் நடிகை ஷகிலா, அஷ்வின், தர்ஷா, பவித்ரா லஷ்மி, மதுரை முத்து, பாபா பாஸ்கர், கடைக்குட்டி சிங்கம் தீபா போன்றோர் பங்கேற்று வரும் இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக சிவாங்கி, புகழ், பாலா, மணிமேகலை, தங்கதுரை போன்றோர் பங்கேற்று வருகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில், இந்த வாரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்று அனைவரையும் பாராட்டி வந்தார். இதனிடையே சிவகார்த்திகேயனுடன் பேசிய அஷ்வின், உங்களுக்கு நியாபகம் இருக்கானு தெரியலை, என் சினிமா வாழ்க்கையை ஆரம்பிக்கிற அப்போ.. நீங்க தான் பெரிய காரணம்.. சென்னை வந்த அப்போ யாரையுமே தெரியாது.. அப்போ முதலில் பார்த்தது உங்களை தான்..

நான் ஒரு மாலில் ஒருத்தரை நம்பி வந்து ஏமாந்து உட்கார்ந்திருந்தேன்.. அவரை பார்க்க முடியாம.. அப்போ உங்களை பார்த்த அப்போ வந்து கேட்டேன்.. அந்த தருணத்தில் நீங்க சொன்னது டைரக்டர், நடிகர் போடுகிற ட்விட்டர் பக்கத்தை எல்லாம் பாலோ பண்ணி வாங்க என சொன்னீங்க.. அதை பாலோ பண்ணி வந்து தான் இங்கே நிக்குறேன் என அந்த புகைப்படத்தை பகிர்ந்தார்.. இதைக்கண்ட ரசிகர்கள் அஷ்வினின் கஷ்டப்பட்டு வந்த பாதையையும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.