அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். மகாநதி என்ற வாழ்க்கை வரலாற்றில் நடிகை சாவித்ரியை சித்தரித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் தமிழில் சினிமாவில் 5 ஆண்டுகளில் உயர்ந்த நிலைக்கும் வந்த நடிகைகளுள் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் என்ற படத்தில் ஆரம்பித்து ரஜினி முருகன், ரெமோ படத்தின் மூலம் ஹிட் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தமிழில் கடைசியாக சர்கார் திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பின் நீண்ட இடைவேளை எடுத்துக்கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் இவர் நடிப்பில் பெண்குயின் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியான, இப்படம் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெளியிடப்பட்டது.
மேலும் நடிகர் கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டாருடன் அண்ணாத்த மற்றும் தெலுங்கில் நடிகர் மகேஷ் பாபுவுடன் ஒரு திரைப்படம் என அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் தற்போது தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் ஆச்சார்யா திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதில் நடிகர் ராம்சரண்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.