கில்லி படம் வில்லன் மனைவி அட இவுங்க தானா? – இவ்வளவு அழகான மனைவி யார் தெரியுமா – புகைப்படங்கள் உள்ளே !!

தமிழ் சினிமாவில் பல வில்லன் நடிகர்கள் வந்து சென்றுள்ளனர் ஆனால் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். அந்த வரிசையில் அந்த காலத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் 70களில் முறுக்கு மீசையுடன் தோன்றிய வில்லன்கள் முதல் இப்பொழுது இருக்கும் high tech வில்லன்கள் வரை மக்கள் மனதில் ஒரு சிலர் மட்டுமே இடம் பிடித்துள்ளனர். இன் நிலையில் வில்லன் கதாபாத்திரத்துடன் நடிக்கும் துணை கதாபாத்திரங்களும் சில நேரத்தில் பெரிதாக பேசப்படும் அந்த வரிசையில் பல ஆண்டுகளாக துணை கதாபத்திரமாக நடித்து இன்னும் பல படங்களில் முகத்தை காட்டி வருபவர் காரத்தே ராஜா.

இவர் நடிக்க வருவதற்கு முன்பு கராத்தே பள்ளி ஒன்றை நடத்தி வந்துள்ளார். மேலும் வில்லனாக நடிக்கும் ஆசையினால் இவர் சென்னை வந்தாராம் . இவர் கடந்த 2004ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பெயர் பெற்றார். அதன் பின்னர் பல பட வாய்ப்புகள் வரவே மகிழ்ச்சியில் ஆழ்ந்த அவர் நிறைய படங்களில் நடிக்க தொடங்கினார் அதன்பின்னர் விஜயின் கில்லி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், போக்கிரி என பல ஹிட் படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்தார். அதன்பின்னர் வீரப்பனின் வாழ்க்கை வரலாற்று கதையில் உருவான நாடகத்தில் முழுவதும் வீரப்பனாகவே வாழ்ந்து நடித்தார் கராத்தே ராஜா.

இப்படி நடிப்பில் மட்டும் கவனம் செலுத்திய இவருக்கு 2009ஆம் ஆண்டு திவ்யா என்பவருடன் இவருக்கு திருமணம் ஆனது.பின்னர் முத்தான மூன்று பெண் குழந்தைகளுக்கு அப்பாவான இவர் மீண்டும் அதிக படங்களை நடிக்க ஆரம்பித்தார் . கடந்த 2014ஆம் ஆண்டு இவருக்கும் இவரது மனைவி திவ்யாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, திவ்யா வீட்டை விட்டு வெளியேறினார்.

உடனடியாக தன் மனைவியை காணவில்லை என போலீசில் புகார் செய்தார் கராத்தே ராஜா. அதன்பின்னர் மீண்டும் வீடு வந்து சேர்ந்தார் திவ்யா. தற்போது இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2015ஆம் ஆண்டு கராத்தே ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறினார். தற்போது மன்னர் வகையறா என்ற விமல் படத்தில் நடித்துள்ளார் காரத்தே ராஜா. மேலும் கையில் பல படங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!