தளபதி விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் போன்ற முன்னணி தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் நடித்து கடந்த ௨௦௦௪ ஆம் ஆண்டு கில்லி படம் வெளியாகி மெகா ஹிட் கொடுத்தது. இந்த திரைப்படம் காதல்,சண்டை என அணைத்து காட்சிகளிலும் விறுவிறுப்பை ஏற்படுத்தியது. அதில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை ஜெனிபர். விஜய் மற்றும் ஜெனிபர் இடையிலான அண்ணா தங்கை சண்டை காட்சிகள் இன்னும் ரசிகர்களிடையே நீங்க இடம் பிடித்துள்ளது.

ஜெனிபர் அவர்கள் இதற்கு முன் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை தொடர்ந்தார். ஜெனிபர், வசந்தின் நேருக்கு நேர் படத்தில் பெற்றோரின் விவாகரத்தால் சிக்கிய ஒரு சிறு குழந்தையாக விஜய் மற்றும் சூர்யவுடன் நடித்துள்ளார், பின்னர் அவர் அசோகவனம் மற்றும் தோழா உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் சன் டிவியில் வள்ளி, கேளடிகண்மனி மற்றும் ஸ்டார் விஜயில் தாயுமானவன் போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார்.
ஒரு முன்னணி நடிகையாக வெற்றியைப் பெற முடியாமல் போன பிறகு, ஜெனிபர் தொடர்ந்து ஒரு துணை நடிகையாகவும், ஸ்டார் விஜய்யின் தொகுப்பாளராகவும் உள்ளார். தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்து இவ்வளவு மார்டனாக ஜெனிபர் மாறிட்டாரா என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.