கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் மனைவியை திருமணம் செய்த முரளி விஜய்.. ஒரு சர்ச்சை ப்ளாஸ்பேக்

தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் நிகிதா என்பவரை முதலில் திருமணம் செய்துக் கொண்டார். நிகிதா முரளி விஜய் மீது காதலில் விழ இவர்கள் விவாகரத்து செய்துக் கொண்டனர். சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால் முதல்தரப் போட்டிகளில் விளையாடும் போது இருவரும் சிறந்த நண்பர்களாகவே இருந்தனர். ஆனால் அதன் பிறகு ஐபிஎல் போட்டியில் நடந்த சம்பவம் இருவருக்கும் மனகசப்பை ஏற்படுத்தி விட்டது.

கடந்த 2007ம் ஆண்டு தினேஷ் கார்த்திக், நிகிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு 2012ம் ஆண்டு ஐபிஎல்-5வது சீசனின் போது நிகிதா முரளிவிஜயை சந்தித்திருக்கிறார். இவர்களது சந்திப்பு காதலில் முடிய, அதன் மூலம் அவர் கர்ப்பமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையறிந்த தினேஷ் கார்த்திக் நிகிதாவை விவாகரத்து செய்துவிட்டார்.

பின்னர் முரளிவிஜய்யும் நிகிதாவும் திருமணம் செய்து கொண்டனர். இந்த சம்பவத்தால் தினேஷ் கார்த்திக் மனதளவில் பாதிக்கப்பட்டதோடு முரளி விஜய்யுடன் மனஸ்தாபமும் ஏற்பட்டது. இந்நிலையில் இருவரின் கிரிக்கெட் வாழ்க்கையும் சில காலம் பாதிக்கப்பட்டது. பின்னர் அதில் இருந்து மீண்டு வந்த தினேஷ் கார்த்திக், சென்னையை சேர்ந்த இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகலை காதலித்து மணந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published.