உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் உள்ளது. தற்போது இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது. கொரோன தொற்று காரணமாக இந்தியா முழுவதும் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால் சினிமா உட்பட பல்வேறு தொழில்களும் முடங்கியுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு விளையாட்டுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடிக்கவைக்கப்பட்டுள்ளது. எப்போது திறக்கப்படும் என எந்த அறிவிப்பும் இல்லை. அதனால் அணைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை வீட்டிலிருந்தபடியே நடத்தி வருகின்றனர். ஆன்லைன் வகுப்பால் பெற்றோர்கள் மிகவும் சிறுமை பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகளின் போது குழந்தைகள் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இருக்காது.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் மகள் ஆத்யா, ஆன்லைன் வகுப்பில் செய்த குறும்பு தனம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அஸ்வின் ” இனி ஆசிரியர்கள் புகார் அளிக்க வேண்டாம்.. எங்களுக்கே புரிகிறது” என்று ஜாலியாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவை கண்ட ரசிகர்கள் பலரும் தங்களின் குழந்தைகள் செய்யும் சேட்டையையும் பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram