தமிழகத்தை சேர்ந்த விஜய் ஷங்கர் இந்திய அணியில் கடந்த ஆண்டு இடம் பெற்று உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. இவர் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஆவார். ஆல் ரவுண்டரை வாழ்த்தி தனது பதவியில் கருத்து தெரிவித்த கிரிக்கெட் நட்சத்திரங்களில் கே.எல்.ராகுல், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அடங்குவர். அதன் பின் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தாலும், இந்திய ஏ அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற நிதாஸ் ட்ராபி தொடரின் இறுதி ஆட்டத்தின், இறுதி ஓவர்களில் தினேஷ் கார்த்திக் உடன் சேர்ந்து விளையாடி பிரபலம் ஆனார். ஆனால், அந்த போட்டியில் இவருடைய பேட்டிங் கடும் விமர்சனத்திற்குள்ளானது. அதன் பின் 2019-ஆம் ஆண்டு நியூசிலாந்து தொடரில் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடரிலும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
இதையடுத்து தற்போது ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடவுள்ள இவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் ஆகியுள்ளது. அது தொடர்பான புகைப்படங்களை, சமூகவலைத்தள பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அவரின் வருங்கால மனைவியின் பெயர் வைசாலி விஸ்வேஸ்வரன் என்பது மட்டுமே தெரியவந்துள்ளது.