சமூக வலைதளங்களான பேஸ்புக், டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை முழுமையாக தற்போது டிக் டாக் வீடியோக்கள் ஆக்கரமிக்க ஆரம்பித்துள்ளன. அவற்றில் திறமையை வெளிக்காட்டும் வீடியோ என்பது மிகவும் குறைவானதே. பெரும்பாலும் ஒன்றுக்கும் உதவாத ஆபாச வீடியோக்களே. தமிழ் பாடல்களுக்கு அல்லது தமிழ் படங்களில் வரும் ஆபாசக் காட்சிகளுக்கு வாயசைப்பதோதான் நிரம்பிக் கிடக்கிறது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது நிலையில், காவல் சீருடை அணிந்த காவலர்கள் இருவர் ரொமான்ஸ் செய்யும் டிக் டாக் வீடியோ வெளியாகி விமர்சனத்துக்காகியுள்ளது. வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ