கால் வைத்தாலோ, நீரைக் குடித்தாலோ சிலையாக மாற்றும் மர்ம ஏரி.. எதனால் இப்படியொரு மாற்றம் தெரியுமா??

மனிதர்கள், பறவைகள், விலங்குகள் ஏதும் கால் வைத்தாலோ, ஏரியில் உள்ள நீரைக் குடித்தாலோ சிலையாக மாற்றும் ஏரி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆப்ரிக்காவில் உள்ள தான்சானியா பகுதியில் இருக்கும் நாட்ரான் ஏரி. இதன் ஆழம் 3 மீற்றருக்கு குறைவாக காணப்படும். இந்த ஏரியின் தண்ணீரைக் குடித்தால் உயிர் போவது மட்டுமின்றி பல ஆண்டுகள் உடல் பதப்படுத்தப்படுவது போன்று சிலையாகவும் மாறிவிடுவார்கள்.

பொதுவாக பார்ப்பதற்கு செந்நிறமாக மிகவும் அழகுடன் காணப்படும் இந்த ஏரி பயங்கர ஆபத்தானதாக காணப்படுகின்றது. இந்த நாட்ரான் ஏரி, காரத்தன்மை வாய்ந்த உப்பு ஏரி. இந்த ஏரியின் ph மதிப்போ 10 லிருந்து 12 வரை அதாவது வலிமை மிகு காரம் என்பார்கள். உலகிலே அதிக உப்பு தன்மை கொண்ட ஏரி, இந்த உப்பு நீரில் உயிர்கள் வாழ்வது எளிதல்ல. இதற்கு காரணம் என்னவென்றால், ஏரியின் நீர் வெளியேற வாய்ப்பில்லாமல் நீர் ஆவியாகி உப்பை மீண்டும் ஏரியிலே படியவைத்து விடுகிறது.

அதுமட்டுமின்றி, அருகில் உள்ள எரிமலை குழம்பும் தான் இந்த உப்பு தன்மைக்கு காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இவ்வாறு எரிமலை குழம்பில் இருந்து பெறப்படும் உப்பை கொண்டு தான் எகிப்தியர்கள் இறந்த உடலை பதப்படுத்தினார்களாம். இதில் பறவைகள், விலங்குகள் தவறி நீரைக் குடித்ததால் அப்படியே உயிரைவிட்டு, சிலையாக மாறியுள்ளன. இந்த புகைப்படம் நம்பமுடியாத வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *