நேரத்தை வீணடிக்காமல் ஒன்றிணைந்து எதிர்ப்போம்..!! EIA எதிராக குரல் கொடுத்த நடிகர் கார்த்தி..!!

இந்தியாவை ஆண்ட தலைவர்களை உலக நாடுகள் பார்த்து வியந்துள்ளனர். இவ்வளவு வளம் வாய்ந்த இந்திய நாட்டில் தற்பொழுது மக்களுக்கு அநீதியாக ஒரு செயல் நடக்க உள்ளது. மக்கள் கேட்காமல் ஒரு தொழிற்சாலை தொடங்குவது எந்த விதத்தில் நியாயம். உலக நாடுகளே பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு இந்தியாவிற்கு என்று பல பெருமைகள் உள்ளது.

இந்த அரசாங்கத்தை நினைத்து மனதுக்குள் அச்சமும் கவலையும் எழுகிறது. EIA சட்டம் குறித்து ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த சட்டத்தைப் பற்றி தமிழர்கள் அறிவதற்கு எந்த வழியும் இல்லை. தமிழர்கள் இதை பற்றி அறிந்து கொள்ள வேண்டாமா.? நமக்கான சுதந்திரத்தை நமக்கான உரிமையை நாம் தான் மீட்டெடுக்க இது தான் கடைசி சந்தர்ப்பம்.

எனவே இந்த [email protected] என்ற இணையதளத்தில் சென்று ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்குள் எதிர்ப்பை தெரிவியுங்கள் எனவும் முடிந்தவரை நாம் முயற்சி செய்து பார்ப்போம் என்று ஒரு ட்வீட் செய்துள்ளார் நடிகர் கார்த்தி. தமிழில் அமீர் எழுதி மற்றும் இயக்கிய படம் தான் பருத்திவீரன். இப்படத்தில் கார்த்தி கதாநாயகனாக அறிமுகமாகிறார். கார்த்தி ஆரம்பகாலத்தில் இயக்குனர் மணி ரத்னாமிடம் துணை இயக்குனராகப் பணியாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published.