கொரோனா லாக்கடவுன் காரணமாக திரையரங்குகள் எங்கும் திறக்க படவில்லை. இதனால் மக்களிடையே சீரியல் பார்க்கும் ஆர்வம் அதிகரித்துவிட்டது. சீரியல், காமெடி, நடனம், பாடல், என பல வருடங்களாக மக்கள் மகிழ வைத்து வரும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இதில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ், நாம் இருவர் நமக்கு இருவர், காற்றின் மொழி, பாக்கியலட்சுமி சீரியல்கள் மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இதில் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் பிரபலமான ஒன்று தான் காற்றின் மொழி சீரியல். ராஜா ராணி சீரியலில் நடிக்க சஞ்சீவ் இந்த சீரியலின் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக பிரியங்கா ஜெயின் என்பவர் நடிக்கிறார். இந்த சீரியலில் நடிப்பது மிகவும் கஷ்டம் யாருக்கு என்றால் பிரியங்காவிற்கு தான்.
காரணம் வாய் பேசாமல் தனது முக பாவனைகளிலேயே சோகம், சந்தோஷம் என எல்லாவற்றையும் காட்ட வேண்டும். அதை அவரும் அழகாக காட்டி வருகிறார் என்றே கூறலாம். பாவாடை தாவணியில் இவரின் அழகை ரசிக்கும் ரசிகர்களுக்கு ஒரு ஷாக்கிங் புகைப்படம். அதாவது இவர் மாடர்ன் உடையில் எடுத்த போட்டோ ஷுட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ பாருங்க..