காமெடி நடிகர் வடிவேல் பாலாஜியின் இறுதி சடங்கு முடிந்தது! கண்ணீருடன் ஏராளமானோர்.. வெளியான வீடியோ!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. கடந்த 15 நாட்களுக்கு முன்பு திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகரும், காமெடி பிரபலமுமான வடிவேலு பாலாஜி உயிரிழந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது அவரின் நெருங்கிய திரைப்பிரபலங்கள், நண்பர்கள் யாரும் உதவ வரவில்லை, உறவினர்கள் தான் தங்களிடம் இருந்த பணத்தை வைத்தே அவருடைய மருத்துவ சிகிச்சையை பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

அது ஒரு புறம் இருந்தாலும், மற்றொரு புறம் தனியார் மருத்துவமனையின் அலட்சியமே அவரின் மரணத்திற்கு காரணம் என்று உறவினர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சிவகார்த்தியேன், வடிவேலு பாலாஜியின் இரண்டு குழந்தைகளின் கல்விக்கான செலவை தானே கவனித்துக்கொள்வதாக உறுதியளித்துள்ளார். பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி நேற்று உடல்நலக்குறைவால் காலமானார், அவரின் மறைவு திரையுலகினரை சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

மறைந்த வடிவேல் பாலாஜியின் உடலுக்கு நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிலையில் வடிவேல் பாலாஜியின் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது, அவரின் உடல் சென்னை சேத்துப்பட்டில் உள்ள வீட்டில் இருந்து நுங்கம்பாக்கம் மயானத்துக்கு எடுத்து செல்லப்படுகிறது. இந்த இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கண்ணீருடன் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *