காமெடி நடிகர் பாலா சரவணனுக்கு இவ்வளவு அழகிய மனைவியா! அவரே கூறிய காதல் கதை.. புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் பாலா சரவணனும் ஒருவர். இதுவை 20 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் தனது காதல் கதையினை சில நாட்களுக்கு முன் கூருகையின் நான் காதல் திருமணம் செய்தவன். என்ஜினியரிங் இரண்டாமாண்டு படிக்கும் போதுதான் காதலிக்க ஆரம்பித்தேன். ஏழுவருட காதலுக்குப் பிறகு தான் காதலியின் கரம் பிடிக்க முடிந்தது. என்னுடைய நெருங்கிய தோழி சூர்யா. சூர்யா வழியாகத்தான் என் காதல் மனைவியின் அறிமுகம் கிடைத்தது. சூர்யா கல்லூரியில் படிக்கும் போது ஹாஸ்டலில் தங்கிப் படித்தார். அந்த நிலையில் வாரத்துக்கு ஓரிருமுறை சூர்யாவுக்கு போன் பண்ணுவேன்.

அப்படி ஒரு முறை ஃபோன் பண்ணும் போது மறுமுனையில் இனிமையான குரலில் ‘யார் பேசறீங்க’ என்ற குரல் ஒலித்தது. புதுக்குரலாக இருக்கிறதே என்று நினைத்து ‘நீங்க யார் பேசறீங்க’ என்று கேட்டேன். ‘நான் சூர்யாவின் ரூம்மேட். சூர்யா கேண்டீன்ல இருக்கிறார்’ என்ற கூடுதல் தகவலோடு பதில் வந்தது. ‘அவசரமா சூர்யாவிடம் பேச வேண்டும். அழைத்து வரமுடியுமா’ என்று கேட்டேன். மறுமுனையில் ‘அதெல்லாம் முடியாது. அவர் சீக்கிரம் வந்துவிடுவார். வந்ததும் உங்களுக்கு பேச சொல்கிறேன்’ என்ற பதில் வந்தது. ‘என்னங்க… நான் அவசரம் கொஞ்சம் கூப்பிடுங்க என்கிறேன். நீங்க அதெல்லாம் முடியாது என்கிறீர்கள். ஒரு ரூம்மேட்டுக்கு இதுதான் நீங்க செய்ற உதவியா’ என்று கன்னாபின்னான்னு பேச ஆரம்பித்து ஒருகட்டத்தில் வாடி போடி என்று பேசுமளவுக்கு பொங்கிவிட்டேன். மறுமுனையில் போன் உடனடியாக கட்டாகிவிட்டது.

பிறகு கொஞ்ச நேரத்தில் சூர்யா லைன்ல வந்தார். என்னிடம் பேசியது ஹேமா என்ற ரூம்மேட் என்றும் நான் பேசியதற்காக அழுவதாகவும் சொன்னார். ‘நான் தேவையில்லாமல் பேசவில்லை’ என்று விளக்கம் கொடுத்தேன். சூர்யாவோ ஒரு ஸாரி கேட்க சொன்னார். நானும் ஹேமாவிடம் சமாதானம் பண்ணும் விதமாக ஸாரி கேட்டுவிட்டு, நான் ரொம்ப நல்லவன். இல்லேன்னா சூர்யா எங்கூட இவ்வளவு பழகி இருக்க முடியுமா என்று எனக்கு நானே காண்டக்ட் சர்டிபிக்கேட் கொடுத்து ஒரு ஸாரிக்காக முக்கா மணி நேரம் பேச ஆரம்பித்தேன். அடுத்த நாளிலிருந்து சூர்யாவுக்கு பதில் ஹேமாவுக்கு ஃபோன் பண்ண ஆரம்பித்தேன். மூணு நாலு மாசம் முகம் பார்க்காமலேயே பேசுகிறேன்.

சூர்யா மீது மரியாதையும் மதிப்பும் இருந்ததால் நட்புக்கு கலங்கம் வந்துவிடக்கூடாது என்பதால் கொஞ்சம் அடக்கியும் வாசித்தேன். அதன் பிறகு என்னால் ஹேமாவிடம் பேசாமலும் மெசேஜ் அனுப்பாமலும் இருக்க முடியவில்லை. எனக்குள் ஹேமா மீது காதல் இருப்பதாக உணர்ந்தேன். ஒரு நாள் ஹேமாவை நேரில் அழைத்து காதல் சொல்ல முடிவு எடுத்து அழைப்பு கொடுத்தேன். அதன் பின்னர் பல எதிப்புக்களை சந்தித்து கடைசியின் இருவரும் திருமணம் செய்து கொண்டோம் என்று குறிப்பிடுள்ளார் இந்த நிலையின் இவருக்கு தற்போத 2 பிள்ளைகள் உண்டு இவர் மனைவி பிள்ளைகளோடு சந்தோசமாக வாழ்கையை கழித்து வருவதோடு படங்களில் நடித்தும் வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *