காமெடி நடிகர் சென்ராயனுக்கு பிறந்தது ஆண் குழந்தை! மகிழ்ச்சிக்கு மத்தியில் வெடித்த புதிய சர்ச்சை! புகைப்படம் உள்ளே

நடிகர் சென்ராயன் தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் தோன்றி இப்போது மக்களுக்கு பரிட்சயமான ஒரு காமெடி நடிகராக திகழ்ந்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் புகழின் உச்சத்திற்கு சென்றார். இந்நிகழ்ச்சியில் திருமணமாகி பல வருடங்கள் கடந்தும் தனக்கு குழந்தை இல்லை என்று கவலையுடன் கூறியிருந்தார். அவரின் கவலைக்கு பரிசாக தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையும் தாயும் ஆரோக்கியமாக இருப்பதுடன், வைத்தியசாலையில் இருந்து புகைப்படத்தையும் நடிகர் சென்ராயன் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் புதிய சர்ச்சைகள் கிளம்ப ஆரம்பித்துள்ளது. பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்குபெற்ற சென்ராயன் தனக்கு குழந்தை இல்லை அதனால் அநாதை குழந்தைகளை தத்தெடுக்க போவதாக கூறியிருந்தார்.அதன் பின்னர் கமலும் கண்டிப்பாக அடுத்த வருடத்திற்குள் உங்கள் மனைவிக்கு குழந்தை பிறக்கும் என்று கூறியிருந்தார்.

பின்னர் கமல் கூறிய வாக்கு பலித்தது போலவே நடிகர் சென்ராயன் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.  ஆனால், சென்றாயன் கூறியதை போல அநாதை குழந்தைகளை தத்தெடுக்க வில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் வாக்குகளை பெற்று கொள்ள

இவ்வாறு கூறியிருக்கலாம் என்று கருத்துக்கள் எழ ஆரம்பித்துள்ளது. இதேவேளை, ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அது மட்டும் இல்லை பிக்பாஸ் நித்தியாவும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.