தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக வளம் வருபவர் காமெடி நடிகர் சூரி. சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பின்னர் சுந்தர பாண்டியன், வருத்தப்படாதா வாலிபர் சங்கம், பாண்டிய நாடு, ஜில்லா, ரஜினி முருகன் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே தனக்கென ஓர் இடத்தை பிடித்தார்.

இதன்பின் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க துவங்கிவிட்டார். தற்போது இவரின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் அளவிற்கு வளந்துவிட்டார் காமெடி நடிகர் சூரி. காமெடி நடிகர் சூரி சின்னத்திரையிலும் திருமதி செல்வம், வீட்டுக்கு வீடு லூட்டி, ராஜா ராஜேஸ்வரி போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது வெற்றிமாறன் இயக்கவிருக்கும் படத்தின் கதாநாயகனாகவே நடிக்க இருக்கிறார் சூரி.
நடிகர் சூரியின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 40 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதுமட்டுமின்றி தான் நடிக்கும் ஒரு படத்திற்கு சுமார் ரூ. 50 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். மேலும் இவை அனைத்தும் அதிகாரபூர்வ தகவல் இல்லை, பிரபல தலத்தில் வெளிவந்ததை தொகுத்து வழங்கி இருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.