காமெடி நடிகர் கிங் காங்கிற்கு இவ்வளவு அழகான குடும்பமா? புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவின் 90ம் காலகட்டத்தில் கவுண்டமணி, செந்தில் போன்ற பலரது படங்களில் காமெடி நடிகராக அசத்தியவர் தான் நடிகர் கிங் காங். சூப்பர் ஸ்டார் நடித்த அதிசய பிறவி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் இவர் ஆடிய பிரேக் டான்ஸ் இன்று பார்த்தால் கூட நகைப்பை தரும். அந்த படத்திற்கு பின்னர் பல்வேறு தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார். இதுவரை 5 மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் பல்வேறு விருதுகளை வாங்கிய இவர் தேசிய விருதையும் பெற்றுள்ளார். அதுமட்டுமில்லாது கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதி வேலூரில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் படத்தையும் அளித்தது.

பல்வேறு படங்களில் நடித்து வந்தாலும் இடையில் சற்று நிதி நெருக்கடிக்கு ஆளானார் கிங் காங். பின்னர் இவரை பிரபு தேவா அழைத்து போக்கிரி படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.

நடிகர் கிங் காங், கலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. வைரலாகும் அவரது குடும்ப புகைப்படம் இதோ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!