தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவர் எஸ்.பி.பி. ரஜினி, கமல், விஜய், அஜித், சல்மான் கான், சிரஞ்சீவி, விஷ்ணுவர்தன் என இவர் இந்தியாவின் அனைத்து சூப்பர் ஸ்டார்களுக்கும் பாடியவர். இதுவரை 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ள எஸ்பிபி ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டுலகின் முடிசூடா மன்னராக வலம் வந்த எஸ்பி பாலசுப்ரமணியம் கொரோனா காரணமாக எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இவரின் மறைவு இந்திய திரையுலகிற்கே பெரும் இழப்பையும், பெரும் துயரத்தையும் தந்துள்ளது. மறைந்த பாடகர் எஸ்.பி.பி மேடை நிகழ்ச்சியின் போது தனது மனைவியை கட்டிப்பிடித்து, அறிமுகப்படுத்தி மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த காட்சி தீயாய் பரவி வருகின்றது. பாடகி ஜானகியுடன் மேடை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எஸ்.பி.பி, இடையில் தன்னிடம் பாடல் நோட்டை கொடுக்க வந்த தனது மனைவியை பாசத்துடன் கட்டியணைத்து மகிழ்ச்சியினை வெளிக்காட்டினார்.
அப்போது பாடகி ஜானகி, எஸ்.பி.பியின் மனைவி என்று கூறினார். மேலும் எஸ்.பி.பி, பாடகி ஜானகி தனது கையில் வைத்திருக்கும் சிறிய பாடல் புத்தகத்தினை மேற்காட்டி நகைச்சுவை செய்தது மட்டுமின்றி, இறுதியில் தனது மனைவியின் பெயரைக் குறித்து துள்ளிக் குதித்த காட்சியே இதுவாகும்.