காதல் மனைவியின் நடவடிக்கையால் ஆத்திரமடைந்த கணவன்! போனை பிடிங்கி பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி

இபெங்களூர் ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவரும் சுஷ்மா என்ற பெண்ணிற்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் இந்த நட்பு நாளைடைவில் காதலாக மாற, இருவரும் மணிக்கணக்கில் போனில் பேசி வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், சுஷ்மா வீட்டிலிருந்து வெளியேறி ராஜை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டிருக்க அதனை கெடுக்கும் விதமாக சுஷ்மா நடந்துகொண்டார். எப்போதும் கையில் போனும் கையுமாக இருந்துள்ளார். வீட்டு வேலையை கூட செய்யாமல் போனை உபயோகப்படுத்திக் கொண்டே இருந்துள்ளார்.

வீட்டில் சாப்பாடு கூட சரியாக செய்யாமல் இருந்து வந்ததால், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ராஜ், அவரின் செல்போனை வாங்கிப் பார்த்த போது அதிர்ச்சியடைந்தார். அதில் சுஷ்மா, பலருடன் இணையத்தில் சாட் செய்து வந்தது தெரியவந்தது. இதனால் அதை மறக்க முடியாமல் தவித்த ராஜ், மனைவியை தீம் பார்க் அழைத்து செல்வதாக கூறி சுஷ்மா மற்றும் 3 மாத கைக்குழந்தையை அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கிருக்கும் தைலமரக்காட்டில் வண்டியை விட்ட ராஜ், மனைவியின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். அதன் பின் பிஞ்சுக்குழந்தை என்றும் பாராமல் குழந்தையையும் கொலை செய்துள்ளார். பின்னர் அவர்களை எரித்துவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளான். 2 நாட்கள் கழித்து அப்பகுதிக்கு ரோந்து சென்ற பொலிசார் அங்கிருந்த உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே சுஷ்மாவும் தனது பேரக்குழந்தையும் காணவில்லை என சுஷ்மாவின் தந்தை போலீஸில் புகார் அளித்திருந்தார். மருமகன் ராஜ் மீது சந்தேக இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இதையடுத்து பொலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் அனைத்து உண்மைகளும் அம்பலமானது. ராஜை கைது செய்த பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.