காதல் ப்ரொபோஸ் செய்த இளைஞர்! கோபத்தில் நிகழ்ச்சியை விட்டுவெளியேறிய பிக் பாஸ் அபிராமி!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகவும் பிரபலமடைந்த நிகழ்ச்சி பிக் பாஸ். கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் 3இல் கவின், லாஸ்லியா, வனிதா, முஜீன், தர்ஷன், சாண்டி, அபிராமி, சாக்ஷி என பலர் பங்கேற்று பிரபலமடைந்தனர். மேலும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது பல சர்ச்சைகள் நடந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனக்கென ஓர் இடத்தை பெற்றார்.

அதன் பின்னர் கடந்த வருடம் நடைபெற்ற பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமானவர் தான் நடிகை அபிராமி. இந்நிகழ்ச்சியில் முதலில் கவினை காதலிப்பதாக கூறினார். அதில் பல பிரச்சனைகள் வர அதன் பின்னர் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகேனைக் காதலித்து வந்த நிலையில், வனிதாவின் ரீ எண்ட்ரியால் இவர்களின் காதலுக்கு முற்றுப்புள்ளி கிடைத்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாதியிலேயே வெளியேற்றப் பெற்றார். இந்நிலையில் படத்தில் கவனம் செலுத்தி வரும் அபிராமி, பிரபல ரிவியில் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இதில் தன்னிடம் காதல் ப்ரொபோஸ் செய்துள்ளார் நிகழ்ச்சி போட்டியாளர் ஒருவர். இதில் உணர்ச்சிவசப்பட்ட அபிராமி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.