காதல் திருமணம் செய்ய போகும் இசையமைப்பாளர் அனிருத்! மணப்பெண் இவர் தானா..! வெளியான தகவல்..

தமிழ் சினிமாவில் தற்போது பிரபல இசையமைப்பாளராக இருப்பார் இசையமைப்பாளர் அனிருத். 3 படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத். அதன் பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல், தளபதி விஜய்யின் கத்தி, தல அஜித்தின் வேதாளம், சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து விட்டார்.

மேலும் தற்போது தளபதி விஜய்யின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இசையில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் டாக்டர் படத்தின் செல்லம்மா பாடல் ரசிகர்கள் மத்தியில் பட்டிதொட்டி எங்கும் சென்று 20 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு வெற்றியடைந்தது.

இப்பாடலை அனிருத்துடன் இணைந்து பிரபல பின்னணி பாடகி ஜோனிட காந்தி என்பவர் பாடி இருந்தார். இந்நிலையில் பின்னணி பாடகியான ஜோனிட காந்தியும் இசையமைப்பாளர் அனிருத்தும் காதலித்து வருதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இது உண்மையல்ல முற்றிலும் வதந்தி என்றும் சில தரப்பில் இருந்து கூறப்படுகிறது. மேலும் இதனை குறித்து அனிருத் தரப்பில் இருந்து விளக்கம் வரும் வரை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published.