காதலியுடன் சந்தோசமாக இருக்க இளைஞர்கள் செய்த செயல்! விசாரணையில் பொலிஸ் சொன்ன அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் காதலியுடன் மகிழ்ச்சியாக ஊர் சுற்ற வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் இரண்டு பேர் மோட்டர் சைக்கிள்களை திருடியுள்ள சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.டெல்லியில் கடந்த சில மாதங்களாகவே விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் திருடு போவது குறித்து பொலிசாருக்கு தொடர்ந்து புகார் வந்துள்ளது. இதனால் பொலிசார் இந்த செயலில் ஈடுபடுவது யார் என்பது குறித்த் தீவிரவமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது உத்தம் நகரில் இருக்கும் பகுதியில் திருடு போன இரண்டு இரு சக்கர வாகனங்கள் இருந்துள்ளது.

இதனால் பொலிசார் அது குறித்து விசாரித்த போது, ரவிசிங்படோரியா(27) மற்றும் சுக்விந்தர்சிங்(23) ஆகியோர் தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அதன் பின் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், காதலியுடன் ஜாலியாக ஊர் சுற்றுவதற்காகவே இப்படி இரு சக்கர வாகனங்களை திருடியதாக கூறியுள்ளனர். அப்படி இவர்கள் திருடும் இரு சக்கர வாகனங்களை காதலியுடன் சென்று வந்த பின், அதை குறைந்த விலைக்கு விற்று வந்துள்ளனர்.

திருடப்பட்ட இரு சக்கர வாகனங்களில் இவர்கள் தற்போது உத்திரகாண்ட் மற்றும் ஹிமாசலப்பிரதேசம் போன்ற பகுதிகளுக்கு சென்று வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

பொலிசார் அவர்களின் காதலியை பிடித்து விசாரித்தால், மேலும் சில தகவல்கள் கிடைக்கும் என்பதால், அவர்களையும் பிடித்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.