காதலியுடன் குளிர் பிரதேசத்துக்கு சுற்றுலா சென்ற காதலன்… சேர்ந்து தங்கிய விடுதியில் நடந்த விபரீத சம்பவம்

தமிழகத்தில் காதலர்கள் சுற்றுலா வந்த இடத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் காதலன் தற்கொலை செய்துக் கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருமங்கலத்தை சேர்ந்த இளைய சூரியன் என்ற இளைஞர், கடந்த 16ஆம் திகதி தனது காதலி மேனகாவுடன் குளிர் பிரதேசமான உதகைக்கு சுற்றுலா சென்றுள்ளார். இருவரும் சேர்ந்து பல இடங்களுக்கு சென்று இயற்கை அழகை கண்டு ரசித்தனர். பின்னர் இருவரும் நேற்றிரவு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது இளைய சூரியனுக்கும் அவர் காதலிக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனையாக மாறியுள்ளது.

இதனால் கோபமடைந்த காதலன், விடுதியில் உள்ள வேறொரு அறையில் தங்கியுள்ளார். காலை நீண்ட நேரம் ஆகியும் அறையின் கதவு திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது எலி மருந்தை உட்கொண்டு இளைய சூரியன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் பிரேத பரிசோதனைகாக உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்தார்கள்.

விசாரணையில், இளைய சூரியனும் அவர் காதலியும் உதகையை சுற்றி பார்த்த போது செல்போனில் நிறைய செல்பி படம் எடுத்து கொண்டனர். பின்னர் விடுதி அறைக்கு வந்த போது இருவருக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில், இளைய சூரியனின் காதலி தனது செல்போனில் காதலனுடன் இருந்த புகைப்படங்களை அழித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளையசூரியன் காதலியை அடித்துள்ளார்.

பின்னர் அவர் வேறு அறைக்கு சென்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதனிடையில் இளையசூரியனுக்கும், அவர் காதலிக்கும் அடிக்கடி சண்டை நடக்கும் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. விரைவில் இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்ய அவர்களின் பெற்றோர் முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.இதைப்பற்றி மேலும் டஹ்கவல் பெற கீழேயுள்ள விடியோவை பாருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!