காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை நண்பர்களுடன் சேர்ந்து 5 நாட்களாக கற்பழிக்கப்பட்ட சிறுமி..!! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..!

சாலைவழியாக பள்ளிக்கு சென்றால் 3 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலையில், கரும்பு காட்டு வழியாக சென்றால் அரை கிலோமீட்டர் தூரமே என்பதால் வயல் வழியாக பள்ளிக்கு சென்று வந்த அந்த மாணவி திடீரென மாயமானார். இதனால் பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கடந்த 11ந்தேதி வெங்காடாபுரம் ஓடையில் பள்ளி சீறுடையுடன் மாணவியின் எலும்பு துண்டுகள் மீட்கப்பட்டன. அவரை கற்பழித்து கொலை செய்து புதைத்தது தெரியவந்தது.

இதையடுத்து மாணவி கொலை வழக்கின் தீவிர விசாரணையில் அதே ஊரை சேர்ந்த சங்கரையா என்ற 20 வயது இளைஞரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் நடத்திய விசாரணையில் மாணவி கொலை குறித்து பல திடுக்கிடும் தகவல் வெளியானது. தினமும் பைக்கில் ஊர் சுற்றும் சங்கரையா மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த மாணவியோ சங்கரையாவை கண்டுகொள்ளவில்லையாம். இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி பள்ளிக்கு புறப்பட்ட அந்த மாணவி மாந்தோப்பில் வசித்து வரும் பாஸ்கர் என்பவரது வீட்டிற்கு பால் ஊற்றி செல்வதற்காக தோப்புக்குள் சென்றுள்ளார்.

மாணவி கற்பழித்த 5 கொடூரர்கள்
அப்போது அங்கு மறைந்திருந்த சங்கரையா அந்த மாணவியை மிரட்டி ஆடைகளை காளைத்து கற்பழித்துள்ளார். இதனை அங்கு வந்த தோப்பு உரிமையாளர் 50 வயதான நாதமுனி மற்றும் அவரது நண்பர் கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் பார்த்துள்ளனர். சங்கரையாவிடம் இருந்து அந்த மாணவியை மீட்காமல் அவர்களும் அந்த மாணவியை மாறி மாறி கற்பழித்துள்ளனர். இந்த விஷயத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்று சங்கரையாவிற்கு 5000 ரூபாய் கொடுத்து அனுப்பி உள்ளனர். பின்னர் 5 நாட்களாக அந்த மாணவியை அறைக்குள் அடைத்து வைத்து பாலியல் செய்து தனது நண்பர்கள் ஜெகதீஷ் மற்றும் சுரேஷ் ஆகியோரை அழைத்து வந்து மாணவியை மாறி மாறி கற்பழித்துள்ளனர்.

இதனால் உடலால் கடுமையாக பாதிக்கப்பட்ட அந்த மாணவி பரிதாபமாக இறந்துள்ளார். இதையடுத்து அவரது சடலத்தை மாந்தோப்பில் புதைத்துள்ளனர். பின்னர் இரு தினங்கள் கழித்து மாணவியின் சடலத்தை எடுத்து வெங்கடபுரம் கால்வாயில் 3 அடிக்கு குழி தோண்டி புதைத்துள்ளனர். மழை பெய்து தண்ணீர் வேகமாக ஓடியதால் மெல்ல மெல்ல அந்த மாணவியின் உருக்குலைந்த சடலம் எலும்புக்கூடாக மேலே வந்துள்ளது. இந்த கொலை குறித்து வெளியில் வாய்திறக்காமல் இருப்பதற்கு நாதமுனி அவ்வப்போது சங்கரையாவிற்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சங்கரய்யா மாந்தோப்பு உரிமையாளர் நாதமுனி, அவரது நண்பர் கிருஷ்ணமூர்த்தி, ஜெகதீஷ், சுரேஷ் உள்ளிட்டோரை வளைத்துப் பிடித்து காவல்துறையினர் தடயங்களை சேகரித்து வருகின்றனர். ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியாக காணப்படும் மாந்தோப்பில் 5 நாட்கள் சிறைவைக்கப்பட்டு வேதனைக்குள்ளாக்கப்பட்ட அந்த மாணவிக்கு நேர்ந்த கொடுமை ஊர் மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.