தமிழ் சினிமா திரை உலகில் “காதலர் தினம்” படத்தின் மூலம் மக்களிடையே அதிகமாக பேசப்பட்டவர் நடிகர் குணால். நடிகர் குணால் மும்பையைச் சேர்ந்தவர். மேலும், தன்னுடைய கல்லூரிப் படிப்பையும் மும்பையிலேயே முடித்தார். இவர் மாடலிங்கும் செய்துவந்தார். இவர் தமிழ் மொழி தவிர இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார்.நடிகர் குணால் ஹிந்தியில் ‘தில் ஹை தில் மெய்ன்’ என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார்.இவர் காதலர் தினம், வருஷமெல்லாம் வசந்தம், புன்னகை தேசம், அற்புதம் பேசாத கண்ணும் பேசுமே, திருடிய இதயத்தை, உணர்ச்சிகள், நிலவினிலே, நண்பனின் காதலி போன்ற பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.கடைசியாக குணால் நடித்த படம் ‘நண்பனின் காதலி’ படம் தான்.இப்படி நல்லா போய்க் கொண்டு இருக்கும் நடிகர் குணால் வாழ்வில் அப்படி என்ன தான் நடந்தது? என்று

இன்னும் பல கேள்விகளை இணையங்களில் எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள். மேலும்,நடிகர் குணால் அவர்கள் 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் கயிற்றில் தொங்கி இறந்துபோனார். அவருடைய மரணம் புரியாத புதிராகவே உள்ளது எனவும் சிலர் கூறி வருகின்றார்கள்..