காணப்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வெளிநாட்டவர்! நீரிழிவு நோயை விரட்ட உதவும் பழம்! தகவல் இதோ

தென்கிழக்காசியாவில் அதிகம் விற்கப்படும் தூரியன் பழத்தை வெட்டி உண்பது சாதாரணமான ஒன்று. ஆனால், அவுஸ்திரேலியாவில் இளைஞர் ஒருவர் பழத்தைச் சரியாக வெட்டும் காட்சி பலரை வாய்பிளக்க வைத்துள்ளது. தென் ஆஸ்திரேலியாவில் உள்ள உட்வில் நகரத்தில் ப்ருட்டி ப்ரூட்ஸ் 88 என்ற கடையில் சைமன் என்ற அந்த நபர் பணிபுரிந்து வருகிறார். கடைக்கு விநியோகிக்கப்படும் புதிய வகை பழங்களைப் பற்றி அவர் காணொளிகளில் விளக்கினார். அந்த வகையில், தூரியன் பழத்தை எவ்வாறு வெட்டவேண்டும் என்பதைக் காணொளியில் விளக்கினார்.

இந்த துரியன் பழத்தை சாப்பிட்டால், உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். அதிலும் பழங்கள் மட்டுமின்றி, இலைகளும் பல மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. அதே சமயம் சில நேரங்களில் இப்பழங்களை சாப்பிட்டால், உடலில் நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்ற கருத்தும் மக்களிடையே உள்ளது. உண்மையில் அவ்வாறு சொல்வதில் தவறு ஏதும் இல்லை. இருப்பினும் போதிய அளவு துரியன் பழத்தை சாப்பிட்டால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

ஏனெனில் துரியன் பழத்தில் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்புச்சத்து, ரிபோஃப்ளேவின், கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் ஆசிட், வைட்டமின் சி, நார்ச்சத்து, துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் உள்பட பல சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் வாழைப்பழத்தை விட 10 மடங்கு அதிகமாக இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. துரியன் பழத்தில் மாங்கனீசு அதிகம் இருப்பதால், அதனைச் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published.