காஜல் அகர்வால் வருங்கால கணவருடன் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது- இதோ அந்த புகைப்படம்..

தென்னிந்திய நடிகைகளுள் மிகவும் பிரபலமான ஒருவர் தான் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகில் நான் மஹான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, விவேகம் மற்றும் தற்போது உலக நாயகன் கமல் ஹாசன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவருக்கு எல்லா மொழிகளிலும் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். இவர் அவரது அற்புதமான நடிப்பினால் மட்டுமின்றி, அழகாலும் ஏராளமான ரசிகர், ரசிகைகளைக் கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் நிறைய நாயகிகள் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள். ஒருபக்கம் தங்களது ஆசை நாயகி சிங்கிளாக இருக்கிறார் என்று நினைத்தாலும் அவர்களுக்கு எப்போது கல்யாணம் என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் உள்ளது. இந்த நேரத்தில் தான் தனது திருமண தேதியையே முடிவு செய்து அந்த தகவலை வெளியிட்டுள்ளார் நடிகை காஜல் அகர்வால்.

அவருக்கும் கௌதம் என்கிற தொழிலதிபருக்கும் வரும் அக்டோபர் 30ம் தேதி மும்பையில் திருமணம் நடக்க இருக்கிறதாம். அவர்களது குடும்பத்தில் முக்கியமானவர்கள் மட்டும் கலந்துகொள்ள உள்ளார்களாம். தற்போது காஜல் அகர்வால் அவரது வருங்கால கணவரின் மடி மேல் உட்கார்ந்து எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதோ முதன்முறையாக வெளியான புகைப்படம்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *