விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதில் பிக் பாஸ் 1 மற்றும் 3 சீனுக்கு றைகள் அதிகம். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த கவின். தற்போது பட வாய்ப்புகளால் ரொம்ப பிஸியாகவே இருக்கிறார். சமீப நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாகவே இருக்கும் கவின் தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவால் தனிமையில் இருக்கும் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

மேலும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது பல சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதியில் காதலர்களாக வெளிவந்தவர்கள் தான் கவின், லொஸ்லியா. இவர்கள் இருவருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போதே ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து வருவதுடன், இருவருக்கும் ஆர்மியும் உருவாகியுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னர் ஒன்றாக இல்லை என்ற தகவல்கள் வெளிவந்தன.
இருவரும் காதலை முறித்துகொண்டார்களா? இல்லை மறைத்து வருகிறார்களா? என ரசிகர்கள் தொடர்ந்து அவர்கள் பதிவிடும் புகைப்படத்திற்கு கமெண்ட் அடித்து வருகிறார்கள். இந்நிலையில், கவின் தற்போது ஒரு ஸ்டைலிஷான புகைப்படத்தை பகிர்ந்து, அதில் ”புதியன கழிதல் பழையன புகுதல்.. ! அதுதானே #தோரோபெக் என பதிவிட்டுள்ளார். இதைக்கண்ட லாஸ்லியா ஆர்மிகள் மற்றும் கவின் ஆர்மிகள் இருவரும் லாஸ்லியாவை குறிப்பிட்டுள்ளீர்கள் என பலவிதமான கமெண்ட்ஸ்களை அடித்து வருகின்றனர்.