கள்ளக்காதலனை தீத்துக்கட்டிய பிரபல துணை நடிகை! பரபரப்பு வாக்குமூலம்! அதிர்ச்சியில் திரைத்துறையினர்..!

திரைத்துறையில் பல மோசமான சம்பவங்கள் நடந்து வருகிறது, அந்த வரிசையில் ஒரு சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் தேவி, சீரியல் மற்றும் சினிமாவில் துணை நடிகையாக வலம் வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் ரவியை  தீத்துக்கட்டிய வழக்கில் தேவி, அவரது கணவர் மற்றும் சகோதரி கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக அவர் அளித்த வாக்குமூலத்தில், நானும், ரவியும் ஒரு படத்தில் இணைந்து நடித்த போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.

ரவி இயக்குனராக முயற்சி செய்து கொண்டிருந்ததுடன் என்னை அவருடைய படத்தில் கதாநாயகியாக நடிக்கவைப்பதாக கூறினார். இதனால் அவருடன் நெருங்கி பழக ஆரம்பித்தேன், ஆனால் அவருக்கு வாய்ப்புகள் இல்லாததால் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். அடிக்கடி என்னுடைய வீட்டுக்கும் வருவார், இதுபற்றி என்னுடைய கணவருக்கு தெரியவந்ததும் என்னை கண்டித்தார்.

நானும் குழந்தைகளின் நலன்கருதி விலகிச்சென்றேன், வீட்டையும் வேறொரு பகுதிக்கு மாற்றினேன். இதனால் கோபப்பட்ட ரவி என்னுடைய தங்கை வீட்டுக்கு சென்று சண்டையிட்டார், ஆபாசமாக பேசினார். இந்த தகவலை என் தங்கை கூறியதும், நாங்கள் அங்கு சென்றோம், எங்களையும் ஆபாசமாக திட்டி தவறாக நடக்க முயன்றார். ஆத்திரத்தில் நான் உருட்டு கட்டையால் தாக்கினேன். தொடர்ந்து அடித்ததில் ஏற்கனவே மதுபோதையில் இருந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் திரைத்துறை மட்டும் இன்றி அணைத்து தரப்பு மக்களிடத்திலும் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.