களைகட்டும் சவுந்தர்யா ரஜினிகாந்தின் இரண்டாம் திருமணம்..!! வந்தவர்களுக்கு என்ன கொடுத்தார்கள் தெரியுமா?

சவுந்தர்யா ரஜினிகாந்த், விசாகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று  நடைபெற்றது.  ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா, விசாகன் வணங்காமுடியின் திருமணம் வரும் 10ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ரஜினிகாந்த்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா. இவருக்கு, அஸ்வின் என்பவர் உடன் திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில், கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். தற்போது சவுந்தர்யா, தொழிலதிபர் விசாகனை மறுமணம் செய்யவுள்ளார்.

இவர்களது, திருமணம் வரும் 11ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் வரவேற்பு நடந்துள்ளது. இதில் இருவீட்டாரது நண்பர்கள் மற்றும் நெருங்கிய சினிமா பிரபலங்கள் இந்த நிகழ்சசியில் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் விதை பந்துகள் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து வரும்11ம் தேதி, சென்னை லீலா பேலஸில் காலை 9.00 முதல் 10.30 முகூர்த்தத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது. இதில் இருவீட்டாரது நெருங்கி உறவினர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள்.

அன்று இரவு 8.30 மணியளவில் மற்றுமொரு வரவேற்பு நிகழ்ச்சியில், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் கலந்துகொள்ள இருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published.