சினிமா துறையில் பல நடிகர் நடிகைகள் உள்ளனர். திரையில் வெளிப்படுத்தும் தன் இயல்பான விஷியன்கள், திரைக்கு பின்னால் அப்படியே இருக்கும் என்பதில் எவ்வித உத்திரவாதமும் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை முறை, பல கதைகள் இருக்கலாம் அல்லவா. சினிமாவை சேர்ந்த பிரபல நடிகைகளுக்கும் சொந்த வாழ்வில் சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன. சர்ச்சைகளில் அவ்வப்போது அவர்கள் சிக்குவதுமுண்டு. பாலிவுட் சினிமாவை சேர்ந்த நடிகை கல்கி கொச்லின் இயக்குனர் அனுராக் கஷ்யபை திருமணம் செய்து விவாகரத்து செய்தார். அதன் பின் காதலர் ஹெர்ஷ்பெர்க்குடன் உறவில் இருந்ததால் கர்ப்பமானார்.

இது குறித்து அவரின் வீட்டிற்கு விசயம் தெரிந்த போது அவர் அம்மா கல்கியிடம், அடுத்த முறை நீங்கள் திருமணம் செய்து கொள்ளும்போது, வாழ்க்கை முழுவதும் கடைசி வரை ஒன்றாக இருப்போம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறினாராம். அண்மையில் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து வெளிப்படையாக கூறியுள்ளார்.
ஒரு பிரபலமான நடிகை ஒருவர் இப்படி ஒரு விஷயம் செய்துள்ளது சற்று அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.