தற்போது நமக்கு பொழுதுபோக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள் தான். அதில் அன்று முதல் இன்று வரை பல வருடங்களை தன்னுடைய நடிப்பின் பயணத்தை தொடரும் ஒருவர் தான் இவர். வெள்ளித்திரை, சின்னத்திரை என மீடியாவுக்குள் கடந்த இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேலாகப் பயணித்து வருபவர் யுவஶ்ரீ.

அவர் அளித்த பேட்டியில், என்னுடைய பதினெட்டு வயசுல வெள்ளித்திரையில் அறிமுகமானேன். ஒருசில தமிழ்ப் படங்களில் நடிச்சேன். அதுல குறிப்பா `சின்ன தம்பி’ படம் மக்கள்கிட்ட என்னைக் கொ ண் டு போச்சு. அதுக்கப்புறம் சில படங்கள்ல நடிச்சேன். பிறகுதான் சின்னதிரை வாய்ப்பு வந்தது. தூர்தர்ஷனில் வெ ளிவ ந்த `நரகாசுரன்’ சீரியல் மூ லம் என்ட்ரி கொ டுத்தே ன். சன்டிவியில் கே.பி. சாருடைய `ரகுவம்சம்’ சீரியலில் என்ட்ரின்னு என் பயணம் ஆரம்பிச்சது இப்படித்தான். என்னுடைய குடும்பச் சூழலுக்காகத்தான் சீரியல், நாடகத்துல ஓட ஆரம்பிச்சேன்.
ஒருகட்டத்துல நான் திருமணம் செஞ்சுக்கணும்னு நினைச்சப்போ சரியான வரன் அமையல. அதுக்கப்புறம் பச்… வயசு போயிருச்சு. சரி, இதுதான் நம் வாழ்க்கைன்னு அதையும் ஏத்துக்கிட்டேன். என் உலகமே என் அம்மாதான். இந்த நடிப்புத் துறை எனக்குப் சக்சஸ் கொ டுக்க லைனாலும் அங்கீகாரத்தைக் கொ டுத்து ருக்கு. பாசிட்டிவ், நெகட்டிவ்ன்னு எந்தக் கதாபாத்திரம் கொ டுத்தா லும் என்னால நடிக்க முடியும். நான் வாய்ப்புகளை எதிர்பார்த்துத்தான் இருக்கேன் என்கிறார்.