கயல் ஆனந்திக்கு திடீர் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா? வெளியான தகவல்

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் கயல். இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே ஓர் இடத்தை பிடித்தார். கயல் படத்தில் நடித்ததன் மூலம் கயல் ஆனந்தி ஆனார். தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்ததில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆனந்தி.

அதன் பின்னர், திரிஷா இல்லைனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பெயர் இருக்கு, சண்டிவீரன், விசாரணை என பல படங்களில் நடித்தார். கடைசியாக நடிகர் கதிர் மற்றும் ஆனந்தி நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படம் நல்ல வெற்றியை பெற்றது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார் ஆனந்தி. ராவண கூட்டம், அலாவுதீன் அற்புத கேமரா, ஏன்ஜெல் போன்ற படங்கள் வெளிவர இருக்கிறது.

இந்நிலையில், ஆனந்திக்கும் தெலங்கானாவை சேர்ந்த சாக்ரடீஸ் என்பவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளதாம். இது காதல் திருமணம் அல்ல என்றும் பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் திருமணம், இன்று இரவு வாராங்கல்லில் நடக்கிறது. இந்த திருமணத்துக்கு, சினிமா உலகை சேர்ந்த யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *