கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா குடும்பத்தில் மீண்டும் நேர்ந்த சோகம்… பிரார்த்தனையில் ரசிகர்கள்!

நடிகர் துருவா சர்ஜா கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக விளங்குபவர். துருவா சர்ஜா அடத்தூரி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. சிரஞ்சீவி சர்ஜா திடீர் மூச்சு திணறல் மற்றும் நெஞ்சுவலி காரணமாக கடந்த மாதம் ஜூன் 7 ஆம் தேதி திடீர் மரணமடைந்தார். அவரது மரணம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சிரஞ்சீவியின் தம்பி துருவா சார்ஜா குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் அவருக்கும் அவரது மனைவிக்கும் தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “எனக்கும் என் மனைவிக்கும் கொரோனா டெஸ்டில் பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளது. எங்களுக்கு சிறிய அளவிலான அறிகுறிகள் மட்டுமே உள்ளது. அதனால் நாங்களே மருத்துவமனையில் சேர முடிவெடுத்தோம்.

நாங்கள் நலமுடன் திரும்ப வருவோம் என உறுதியாக இருக்கிறேன். எங்களுடன் நெருக்கமாக இருந்த அனைவரும் தயவு செய்து கொரோனா டெஸ்ட் செய்து கொள்ளுங்கள். பாதுகாப்புடன் இருங்கள்” என பதிவிட்டுள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் துருவா சார்ஜா விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published.