கண்ணை கொள்ளை கொள்ளும் அழகில் நடிகை நயன்தாரா! பட்டு புடவையில் எப்படி இருக்கிறார் பாருங்க- புகைப்படம் இதோ

தமிழ் திரை நடிகைகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக வளம் வருகிறார் நடிகை நயன்தாரா. ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். அதன் பின்னர் சந்திரமுகி, யாரடி நீ மோஹினி, ராஜா ராணி போன்ற பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஆர் ஜெ பாலாஜியுடன் இணைந்து இவர் நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

எத்தனை நடிகைகள் திரைக்கு வந்தாலும் முதலிடம் தனக்கே என தன் அழகாலும், நடிப்பாலும், திறமையாலும் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்துள்ளார் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் தற்போது நெற்றிக்கண் திரைப்படம் கூடிய விரைவில் வெளியாக காத்து இருக்கிறது. மேலும் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட திரைப்படம் படமாக்கட்பட்டு வருகிறது. படங்களில் மட்டுமல்லாமல் விளம்பர படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா.

ஆம் கடைசியாக இவர் நடிப்பில் செருப்பு விளம்பரம் வெளியானது. இந்நிலையில் மீண்டும் ஒரு நகைக்கடை விளம்பரத்திற்கு நடித்துள்ளாராம். அந்த படப்பிடிப்பின் போது பட்டு புடவையில் நடிகை நயன்தாராவை எடுத்த கண்ணை கொள்ளைகொள்ளும் அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..

Leave a Reply

Your email address will not be published.