“கண்டிப்பா உங்கள செய்வன்” இயக்குனருக்கு கொலை மிரட்டல் விட்ட காமெடி நடிகர் கருணாகரன்- வைரலாகும் ஆடியோ பதிவு

படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வரவில்லை என்று பொதுமேடையில் புகார் சொன்னதற்காக காமெடி நடிகர் கருணாகரன் தங்களை அடியாட்களை வைத்து மிரட்டுவதாக ‘பொதுநலன் கருதி’ பட இயக்குநரும் தயாரிப்பாளரும் இன்று காலை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்திருக்கின்றனர். காமெடி நடிகர் கருணாகரனுடன் இன்னும் சில புதுமுகங்கள் நடித்திருக்கும் படம் ‘பொதுநலன் கருதி’. கந்து வட்டியின் கொடுமை குறித்து விலாவாரியாகப் பேசும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு கடந்த வாரம் பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கருணாகரன் கலந்துகொண்டு பட புரமோஷனுக்கு உதவாததால் இயக்குநர் சீயோன் கருணாகரனைத் தாக்கி மேடையிலேயே பேசினார். இதனால் கோபமடைந்த கருணாகரன் சில அடியாட்கள் மூலம் இயக்குநர் சீயோனையும், இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்தையும் கடுமையான வார்த்தைகளால் மிரட்டியதாகத் தெரிகிறது. இதை ஒட்டி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் குழுவினருடன் சற்றுமுன்னர்

சென்னை போலிஸ் கமிஷனர் அலுவலகம் வந்த சீயோன் கந்து வட்டிப் பார்ட்டிகளின் துணைகொண்டு கருணாகரன் தனக்கு மிரட்டல் விடுப்பதாக புகார் கொடுத்தார். அம்மனுவில் படத்தில் நடிக்கவும் புரமோஷனுக்கு வரவும் சம்பளமாக கருணாகரனுக்கு 25 லட்சம் தரப்பட்டதாகவும், அதன்படி நடந்துகொள்ளாத கருணாகரன்,

படத்தின் கதை கந்துவட்டிக்கு எதிராக இருப்பதால் அதே கோஷ்டிகளுடன் சேர்ந்து தங்களை அருவருப்பான நாகரிகமற்ற வார்த்தைகளில் மிரட்டி வருவதாகவும், அவர்களிடமிருந்து தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டுமென்றும் கேட்டுள்ளனர். வைரலாகும் அந்த ஆடியோ பதிவு இதோ

Leave a Reply

Your email address will not be published.