கணவர் சொன்னாரு, அதனால தி டீர்ன் னு எல்லாத்தையும் நிறு த்திட்டேன்..!! படங்கள், சீரியல்களில் அம்மாவக நடிக்கு மீரா கிருஷ்ணன் ஷேரிங்ஸ்..!!

அன்று முதல் இன்று வரை தமிழ் சினிமாவில் மறக்க முடியாத பல நடிகைகள் உள்ளார்கள். இன்றும் அவர்களை சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்கள்.
நடிகையாகவும், பாடகியாகவும் என்னைப் பலருக்கும் தெரியும். ஆனா, வீணைக் கலைஞர் என்பதுதான் என்னுடைய முதல் அடையாளம் என்றார் நடிகை மீரா கிருஷ்ணன். நான் ரொம்ப விரும்பற அடையாளமும் இதுதான்.

நேரமின்மையால் வீணையை மறந்துபோன என் தவ றை உணர்ந்து, இப்போ தினமும் அதைக் குழந்தையா மடியில வெச்சு கொஞ்சிட்டிருக்கேன்’’ – பர வசத்  துடன் பேசுகிறார் மீரா கிருஷ்ணன். “என் அம்மா நல்லா பாடுவாங்க. அதைக் கேட்டு, நானும் பாட்டு கிளாஸ் போறேன்னு சொன்னேன். போனஸா, வீணை கிளாஸிலும் சேர்த்துவிட்டாங்க. அப்படி பத்து வயசுல கத்துக்க ஆரம்பிச்சேன்.‘இவளை ஆல்பங்கள்ல வாசிக்க வைக்கலாமே’னு அப்பாகிட்ட அவரின் நண்பரும், பிரபல பக்திப் பாடல் பாடகரும்,

என் மாமனாருமான கே. வீரமணி மாமா சொன்னார். எம்.ஏ. மியூசிக் படிச்சுட்டிருந்தப்போ மாமனாரின் ஐயப்பன் ஆல்பங்களுக்கு வீணை வாசிச்சுட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. கீரவாணி, ராகவேந்திரா, ஹெச்.எம்.வி. ரகு, தேவா, தினகரன் உள்ளிட்ட நிறைய இசையமைப்பாளர்களுக்கு திரைப்படப் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கும் பக்தி பாடல் ஆல்பங்களுக்கும் பிஸியா வாசிச்சுட்டிருந்த காலம் அது’’ என்று நினைவுகூர்கிறார் மீரா. அவரின் கணவர்… பிரபல சவுண்ட் இன்ஜினீயர் மற்றும் இசைக் கலைஞரான கிருஷ்ணன்.

கணவரின் ஊக் கத் தால் தான் பாடகியானதைச் சொல்லும்போது, உற்  சாகம்  மீராவுக்கு. இதுவரை 250-க்கும் மேற் பட்ட பக்தி ஆல்பங்களுக்குப் பாடியிருப்பதோடு, ‘மீரா கிருஷ்ணன் மெலடீஸ்’னு என்கிற பேண்ட் பெயரில் நிறைய மேடைக் கச்சேரிகளும் பண் ணிட்டி ருக்கேன். ஒண்ணு தெரியுமா… நான் நடிகையாகவும் என் கணவர்தான் காரணம்’’ எனும்போது, ‘`ஹய் யோ மீரா போது ம்மா!’’ என்று கூச் சத்து டன் சிரிக்கிறார் அவர் கணவர். அதை ரசித்து தொடர்ந்தார் மீரா.

“நான் பாடின ‘அம்மா’ ஆல்பம் கேசட்ல என் போட்டோவைப் பார்த்து, 1998-ல் எனக்கு சீரியல் வாய்ப்பு வந்தது. ‘நடிப்பெல்லாம் நமக்கு வராது’னு நான் மறு த்தப்போ, ‘உன்னால முடியும்னு நம்பிதான் உனக்கு இந்த வாய்ப்பைக் கொடு க்கிறா ங்க. நடிச்சுப்பாரு, சரிவரலைன்னா விட் டுடலாம்’னு கணவர் சொன்னார். அப்படித்தான் ‘குப்பத்து சாஸ்திரிகள்’ சீரியல்ல நடிச்சேன். ‘வாவ்… சின்னத்திரைக்கு ஒரு சூப்பர் நடிகை கிடைச்சுட்டாங்க’னு எனக்கு முதல் பாராட்டு வந்தது என் கணவர்கிட்டயிருந்துதான்.

Leave a Reply

Your email address will not be published.