கணவரின் தமியோடோவா…! புல்வாமா தாக்குதலில் இறந்துபோன இராணுவ வீரரின் மனைவிக்கு நிகழ்ந்த விபரீதம்

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த இராணுவ வீரரின் மனைவி தனது நிலைமை குறித்து தற்போது தெரியப்படுத்தியுள்ளார். பிப்ரவரி 12 ஆம் திகதி புல்வாமா மாவட்டத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இவர்களில் கர்நாடக மாநிலம் தாண்டியாவை சேர்ந்த குரு என்பவரும் ஒருவர். இவரது மனைவி கலாவதிக்கு அரசாங்க வேலை போட்டு கொடுப்பதாக முதல்வர் குமாரசாமி தெரிவித்திருந்தார்.

மேலும், அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் நிதியுதவிகள் வந்தன. இந்நிலையில், தனது குடும்பத்தினர் தற்போது பணப்பிரச்சனையின் காரணமாக பிரிந்து நிற்கிறார்கள் என கலாவதி கூறியுள்ளார். மேலும், இறந்துபோன எனது கணவரின் தம்பியை திருமணம் செய்துகொள்ளுமாறு

குடும்பத்தினர் கட்டாயப்படுத்துவதாக பொலிசில் புகார் அளித்துள்ளார். அனைத்து தரப்பிலும் இருந்தும் வரும் நிதியுதவியே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யவில்லை.

குடும்ப பிரச்சனை, சட்டதை மீறில் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணவனை இழந்த பெண்ணை இப்படி துன்புறுத்தக்கூடாது என்று இணையவாசிகள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.