கணவன் வெளிநாட்டில்..!! ஆடைகள் கிழிந்து வீட்டில் கிடந்த இளம் பெண் சடலம்.! திருமணமான 6 மாதத்தில் கொடூரம்!

விருத்தாசலத்தை அடுத்த க.இளமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன். வெளிநாட்டில் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சிவப்பிரியா. இவர்கள் திருமணம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தான் நடைபெற்றது. இந்நிலையில் கணவனின் வீட்டில் சிவப்பிரியா, நேற்று முன்தினம் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்தார். இது தொடர்பான தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், புதுகூரைப்பேட்டையை சேர்ந்த சிவப்பிரியாவின் தந்தை ஜோதி காவல்துறையில் அளித்த புகாரில் தனது மகள் திருமணத்தின் போது, 7 பவுன் நகை, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள், 70 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை சீர் வரிசையாக கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

கணவன் பார்த்திபன், அவரது தாய் கவுரி, சகோதரிகள் பானுமதி, நளினி ஆகியோர் சேர்ந்து தந்தையிடம் சென்று கூடுதல் வரதட்சணையாக 25 பவுன் நகை, 5 லட்சம் ரூபாய் வாங்கி வருமாறு கூறி சிவபிரியாவை கொடுமைப்படுத்தியதாகவும அது குறித்து சிவப்பிரியா தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் தனது மகளின் வளைகாப்பின் போது தான் சீர் வரிசை  செய்வதாகத் தெரிவித்திருந்ததாகவும்,

ஆனால் தனது மகள் இறந்து விட்டதாக தகவல் கிடைத்ததையடுத்து தான் சென்று பார்த்த போது வீட்டில் யாரும் இல்லை என்றும் தன் மகள் உடல் மாட்டும் காயங்களுடன் தரையில் கிடந்ததாகவும், அவரது உடையும் கிழிந்த நிலையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தனது மகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். தனது மகள் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும் அவர் அளித்த புகாரின் பேரில் விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரசாந்த் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *