கணவன் முன்னிலையிலே மனைவியை சீரழித்த வாலிபர்கள்..!! 2 வாரங்கள் தொடர்ந்து நிகழ்ந்த அவலம்!

இளம் தம்பதியை 2 வாரங்கள் அடைத்து வைத்த இரண்டு நபர்கள் கணவனை அடித்து உதைத்து சித்திரவதை செய்ததோடு மனைவியை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. நலசோப்பாரா நகரைச் சேர்ந்த அண்மையில் தான் திருமணமான 21 வயது இளம் பெண்ணை அணுகிய ஒருவன் தன்னை போலீஸ் என அறிமுகப்படுத்திக்கொண்டான். இளம் பெண்ணின் கணவனை காவல்துறையினர் கைது செய்திருப்பதாகவும் தன்னுடன் வந்தால் ஜாமீன் எடுக்க உதவுதாகவும் தெரிவித்தான். வந்தவன் போலி என அறியாமல் அந்தப் பெண்ணும் அவனுடன் ஆட்டோவில் புறப்பட்டார். அந்த நபர் சாமர்த்தியமாகப் பேசி மும்பையின் மலாடில் உள்ள ஒரு வீட்டுக்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றான்.

உள்ளே சென்று பார்த்தபோது அந்த நபரின் கூட்டாளியான மற்றொருவன் அந்தப் பெண்ணின் கணவனையும் அதே வீட்டில் கடத்திக் கொண்டு வந்து வைத்திருந்ததது தெரியவந்தது. முதலில் ஒருவாரம் அந்த வீட்டில் அவர்கள் இருவரையும் அடைத்து வைத்த அவர்கள் கணவனை தொடர்ந்து அடித்து உதைத்து சித்திரவதை செய்தனர். மனைவியையும் கணவன் கண் முன்பே இரண்டு பேரும் பலமுறை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்தனர். .

ஆனால் ஒரு வாரத்துக்குப் பின்னும் அவர்களை விடுவிக்க மனமில்லாத அந்தக் கொடூரர்கள் மிரா சாலையில் உள்ள வேறு ஒரு வீட்டில் அடைத்து வைத்து அடுத்த ஒருவாரத்துக்கு கணவனை தொடர்ந்து அடித்து சித்ரவதை செய்ததோடு மனைவியை முறை வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்

ஒருவழியாக இரண்டு வாரத்துக்குப் பின் அந்த இருவரும் தம்பதியை விடுவித்த நிலையில் அவர்கள் நேராக காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த இரு நபர்களையும் இன்னும் தேடி வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published.