கணவனை கொன்றுவிட்டு காதலனுடன் வெளிநாட்டு சுற்றுலாவிற்கு திட்டமிட்ட மனைவி! சிக்கியது எப்படி?

இந்தியாவில் கணவனை கொலை செய்துவிட்டு, காதலனுடன் மனைவி ஓட்டம் பிடிக்க திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரளாவின் கொச்சியில் நகரத்தில் இருக்கும் காகனாட் பகுதியைச் சேர்ந்த தம்பதி கொச்சீரியல் சஜிதா(39)-பால்வர்கிஸ்(43). இந்த தம்பதிக்கு 8 மற்றும் 4 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த போது, திடீரென்று கடந்த 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ஆம் திகதி பால்வர்கிஸ் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக சஜிதா உறவினர்களிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து உடலை மீட்ட பொலிசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உறவினர்களும் பால்வர்கிஸின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறியுள்ளனர். உறவினர்கள் நினைத்தது போலவே, அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை, இது ஒரு கொலை என்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் பொலிசார் இது குறித்து கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்ட போது, சஜிதாவின் போனை சோதனை செய்துள்ளனர்.

அப்போது சஜிதா, டிஸ்ஸான் என்ற நபருடன் தொடர்ந்து பேசி வந்துள்ளது தெரியவந்துள்ளது. அவரைப் பற்றி பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், சஜிதா தன் கணவரின் உறவினர் திருமணத்திற்கு சென்ற போது டிஸ்ஸன் என்ற நபரை சந்தித்துள்ளார். அதன் மூலம் அறிமுகமான இவர்கள் போனில் பேசிக் கொண்டு வந்துள்ளனர். டிஸ்ஸன் பிரித்தானியாவில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வருகிறார்.

தொடர்ந்து போனில் பேசி வந்துள்ளதால், இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இதனால் சஜிதா, டிஸ்ஸனுடன் வாழ முடிவு செய்துள்ளார். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசித்த போது கணவனை கொலை செய்துவிடலாம் என்று முடிவு செய்துள்ளார். இதற்கு டிஸ்ஸனும் உதவுவதாக கூறியுள்ளார். ஆனால் சஜிதா தன்னுடைய இரண்டு குழந்தைகள் வேண்டும் என்று கூறியுள்ளார். அதன் படி சம்பவ தினத்தன்று, குழந்தைகளை மற்றொரு அறையில் தூங்க வைத்து, கணவனுக்கு சாப்பிட்டில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து சஜிதா தூங்க வைத்துள்ளார். அவர் தூங்கிய பின் பில்லோவை வைத்து அழுத்தி கொலை செய்துள்ளார்.

இந்த கொலை செய்வதற்கு டிஸ்ஸன் பிரித்தானியாவிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது. கொலை செய்த பின் அவர் உடனடியாக அங்கிருந்து சென்றுள்ளார். அதன் பின்னரே சஜிதா தன் உறவினர்களுக்கு இந்த தகவலை தெரிவித்துள்ளார். அதற்கான தடயங்களை எல்லாம் அழித்த போதும், போன் விசாரணையில் சஜிதா சிக்கியுள்ளார். சஜிதா போன்றே டிஸ்ஸனும் தன் மனைவியை கொலை செய்துவிட்டு, இவருடன் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பின் இருவரும் பிரித்தானியாவிற்கு சென்றுவிடலாம் என்று முடிவு செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருவதால், சஜிதாவுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்படலாம் என அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உதவிய டிஸ்ஸனுக்கு என்ன தண்டனை என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!