பொலிவுட்டில் பல முன்னணி பிரபலங்கள் இருந்தாலும் ஒரு சிலர் மக்களிடத்தில் மிகவும் பிரபலமாக இருக்கிறார்கள் அதில் ஒருவர் தான் பிரியங்கா சோப்ரா அவர்கள்.. நடிகை பிரியங்கா சோப்ரா, இவர் முதன் முதலில் தளபதி விஜய்யின் நடிப்பில் வெளிவந்த தமிழன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதன்பின் ஹிந்திக்கு சென்று தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் நடிகை பிரியங்கா. இவர் 2018ஆம் ஆண்டு வெளிநாட்டை சார்ந்த நடிகர் நிக் ஜோனஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
மேலும் சமீபகாலமாக இந்த ஜோடிகளை பற்றி சில சர்ச்சைக்குரிய செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் தற்போது அண்மையில் இருவரும் கலந்து கொண்ட நிகழ்வில் பிரியங்கா சோப்ரா முகம் சுளிக்கும் வகையில் உடை ஒன்றை அணிந்திருந்தார். மேலும் அந்த விழாவில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து மது அருந்தும் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.
இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறார்கள். சினிமா துறையில் தற்போது மது அருந்துவது, சிகெரெட்டே பிடிப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் நடிகர் நடிகைகள் வெளியிடுவது சாதாரமாகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்