கணவனிடம் முன்னாள் காதலனுக்காக அனுமதி கேட்ட மணப்பெண்! இணையத்தில் வைரலாகும் வீடியோ

மணமகன் கண்முன்னே முன்னாள் காதலனை கட்டிப்பிடித்த மணப்பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி.. இந்தோனேஷியாவில், புதுமண தம்பதிகளை வாழ்த்த வேண்டி, மணப்பெண்ணின் முன்னாள் காதலர் திருமணத்திற்கு வந்துள்ளார். இதன்பின்னர், தனது முன்னாள் காதலியை வாழ்த்த மேடைக்கு வந்த காதலர், மணப்பெண் கைகுலுக்க வந்த போது அதனை தவிர்த்துள்ளார். அப்போது, தனது முன்னாள் காதலனை கட்டிப் பிடிக்க வேண்டி, கணவரிடம் புதுமணப்பெண் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் அதற்கும் ஆச்சரியப்படும் விதமாக, மணமகனும் சம்மதிக்க, முன்னாள் காதலனை மணமேடையில் வைத்து கட்டிப் பிடித்துள்ளார். மேலும், இது தொடர்பான வீடியோ ஒன்றை, மணப்பெண் டிக் டாக் வீடியோவாக தனது இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகவும் பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.