கடந்த சில நாட்களாக மக்கள் மத்தியில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் நாமினேஷனுக்கான நிகழ்வு நடைபெற்றது. இதில் ஒவ்வொருவரது முகமூடியும் வெளிவந்தது என்றே கூறலாம். குறிப்பாக சேரன் லொஸ்லியாவை நாமினேட் செய்தது ஒட்டுமொத்த பார்வையாளர்களுக்கும் அதிர்ச்சியினையே ஏற்படுத்தியது. நேற்றைய தினத்தில் ஏழு பேர் நாமினேஷனில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதன் சேரன் இவ்வளவு தானா? என்று மக்கள் எண்ணும் அளவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் தற்போது இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் மதுமிதா, வனிதா சரியாக சண்டை போட்டுக்கொள்கின்றனர். வனிதா, மதுமிதாவிடம் தாலியை கழட்டிவிட்டு, நிகழ்ச்சிக்கு வந்து கலாச்சாரம் பற்றி பேசுகிறாயா? என கடுமையாக தாக்கியுள்ளார்
இறுதியில் வனிதாவின் வாயை அடைத்துவிடுகிறார் மதுமிதா. இரண்டாவது ப்ரொமோ காட்சியில் கவினுக்கும், மீராவிற்கும் வாக்குவாதம் ஏற்படுகின்றது. நிறுத்தாமல் சென்று கொண்டிருந்த இதில் மோகன் வைத்தியாவிடமும் குரலை உயர்த்திப் பேசியுள்ளார் மீரா. இதனால் கோபத்தில் பொங்கி எழுந்துள்ளார் மோகன்
நீங்க சட் அப் பண்ணுங்க..!#பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/3Y4IuNze9d
— Vijay Television (@vijaytelevision) July 2, 2019