மதுரை சிம்மக்கல் பகுதியை ஒட்டி இருக்கும் மணிநகரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். அவருடைய மனைவி ஆவுடை தேவி. இவர்களுக்கு பூரண சுந்தரி என்ற மகள் இருக்கிறார். இவருக்கு 5 வயது இருக்கும் போது பார்வை நரம்புகள் சுருங்கியதால் தன்னுடைய பார்வை திறனை முற்றிலுமாக இழந்துள்ளார். பார்வைக்கும் சாதனைக்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்பதை மெய்பிக்கும் வகையில் இவருடைய சாதனை மிகப்பெரியது. சமீபத்தில் யு.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

தமிழகத்தை சேர்ந்த 60 நபர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், தமிழகத்திலிருந்து சிலர் இந்த தேர்வில் தேர்ச்சியடைந்திருந்தாலும், குறிப்பிடத்தக்கதாக மதுரையை சேர்ந்த பூரண சுந்தரி எனும் பார்வையற்ற மாற்றுத் திறனாளி இந்த தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளார். 25 வயதாகும் பூரண சுந்தரி 4வது முறையாக இந்த தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்வில் இவர் 286வது இடத்தினை அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் சுந்தரியின் ஊக்கத்திற்கு பெற்றோர்கள் காரணம். வாசிப்பதற்கு ஏற்றவாறு புத்தகங்களை ஒலியாக மாற்றி கொடுத்துள்ளனர். இதுவே சுந்தரியின் வெற்றிக்கு அடிப்படை. உங்கள் கனவுகளைத் துரத்துவதை ஒருபோதும் நிறுத்த வேண்டாம் என டிவிட்டரில் சுந்தரியை பாராட்டியுள்ளார். இதே போல பல்வேறு நபர்கள் சுந்தரியை பாராட்டியுள்ளனர்.