கடின உழைப்பால் உச்சம் தொட்ட எம்பி வசந்தகுமார்க்கு கொரோனா தொற்று இல்லை.. வெளியான உண்மை தகவல்..

காங்கிரஸ் எம்பி வசந்தகுமாரின் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் வசந்த் & கோ கடைகள் 64 கிளைகளோடு தமிழ்நாடு, கேரளா, பாண்டிசேரி உள்ளிட்ட மாநிலங்களில் இன்று வியாபாரத்தில் வெற்றி நடை போட்டு வருகிறது. படித்து கொண்டே விஜிபி நிறுவனத்தில் வீட்டு பொருட்கள் விற்பனையாளராக சேர்ந்த வசந்தகுமார் அங்கு எட்டு வருடங்கள் பணிபுரிந்தார். அங்கு வீட்டு பொருட்கள் வியாபாரத்தை பற்றிய அனைத்து விடயங்களையும் கற்று கொண்டதுடன், தனது வேலையை ராஜினாமா செய்தார்.

வியாபாரம், அரசியல், சமூக சேவை என உழைப்பின் முகவரியாய் திகழ்ந்த வசந்த் அண்ட் கோ அதிபர் எச். வசந்தகுமார். கடந்த 10 ம் திகதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வசந்தகுமாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் முடிவுகள் பாசிட்டிவாக வந்ததால் அதற்காக சிகிச்சைகள் தொடர்ந்தன, இதனால் நுரையீரலில் சளி தொந்தரவு அதிகரித்ததால் நிமோனியா தொற்று ஏற்பட்டு மூச்சுவிட சிரமப்பட்டார்.

உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையிலும் நேற்று இரவு 7 மணிக்கு காலமானார். இந்நிலையில் நேற்று காலை 10.44 மணிக்கு அவருடைய சளி மாதிரியை எடுத்து மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில், எச்.வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று இல்லை (நெகட்டிவ்) என்று முடிவு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.பி கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், நிமோனியா காய்ச்சலால் காலமானார்.

Leave a Reply

Your email address will not be published.